Pages

Wednesday, 25 July 2012



கவிதை பிரசவம் 

அம்மா, உன் முத்தங்கள் தான்
என் கன்னத்துக்கு அழகு,

ஒன்று இரண்டு என்று இல்லாமல்
அள்ளி வழங்கியதும் அழகு,

என் குறும்பு சரித்திரத்தில் கம்பில்லாமல்
அன்பில் அடக்கியது அழகு,

உன் துணை இழந்தாலும் நீ
என் தனை வளர்த்தது அழகு.