தனிமை - தீயினும் கொடியது.
திருமணம் முடிந்த சில மாதங்களில், ஒரு ஆண் தன் துணைய இழக்கும் போதும், ஒரு பெண் தன் துணைய இழக்கும் போதும், நம் சமூகம் இந்த இரண்டுக்கும் வேறு வேறு காரணங்கள் கைவசம் வெய்த்து இருக்கும்.
ஒரு ஆண் பெண்ணை இழக்கும் போது , " அவ குடுத்து வெச்சது அவ்வளவுதா " அப்படின்னு சொல்ற வாய் எல்லாம் ஒரு பெண் தன் கணவனை இழக்கும் போது என்ன சொல்ல வரும் தெரியுமா.. " இவ எந்த நேரத்துல வந்தாலோ அவன் உயிரை வாங்கிடுச்சு " .!!!
ஒரு கணவன் மனைவிக்கு ஊடே நடந்து செல்வதே பாவம் னு சாஸ்திரம் சொல்லுது. அப்படி இருக்க ஒரு உயிர் இன்னோர் உயிரை இழந்து இருக்கும் போது, இந்த மாதிரி பேசுவது மட்டுமல்ல, நினைப்பதே பாவம்.
மேகம் தொலைத்த வானம் போல்,
உன்னை தொலைத்த நான்..
எப்போதுமே வெட்டவெளி..!!!
மேகம் இல்லாத வானமா நாம ஆகும் போது, நமக்கு புரியும்.
